சர்ச்சைகளை கடந்து 25ம் தேதி வெளியாகிறது பத்மாவத்

  SRK   | Last Modified : 15 Jan, 2018 12:30 pm


பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவத் இந்த மாதம் 25ம் தேதி உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் படம் வெளியாகிறது.

ராஜ்புட் இன மக்களின் சரித்திரத்தை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ராணி பத்மாவதியாக நடித்துள்ளார். ரன்வீர் சிங் ஷாஹித் கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். இதில் ராணி பத்மினியை இழிவுபடுத்துவது போல பல காட்சிகள் அமைந்துள்ளதாக குஜராத், ராஜஸ்தானில் உள்ள  ராஜ்புட் மக்கள் படத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். பல போராட்டங்களும் நடத்தப்பட்டது.

மத்திய தணிக்கை குழு, இந்த படத்தின் பெயரை 'பத்மாவதி'யில் இருந்து பத்மாவத் என மாற்றவும், சில மாற்றங்களை செய்யவும் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. 

ஆனால், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் படத்தை தடை செய்து அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இருந்தாலும், பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே படம் 25ம் தேதி உலகெங்கும் வெளியாக உள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பன்சாலி பேசியபோது, "பத்மாவத் எனது கனவு நனவானது போல உள்ளது. ராஜ்புட் இன மக்களின் பலம், சாதனைகள், கலாச்சாரம் பற்றி இந்த படத்தில் மிக அழகாக எடுத்துள்ளோம். பிரச்னைகளுக்கு நடுவே எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி" என்று கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close