யார் ஹேண்ட்ஸம்..? ஹாலிவுட்டையே தூக்கி சாப்பிட்ட 'இந்தியன்' ஹிரித்திக் ரோஷன் ..!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 16 Jan, 2018 06:30 am


2018-ம் ஆண்டுக்கான மிகவும் ஹேண்ட்சமான ஹீரோவாக பாலிவுட் நடிகரான ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியிருக்கிறார்.

இந்தி நடிகரான ஹிரித்திக் ரோஷன் தனது கவர்ச்சிகரமான நடிப்பாலும் தோற்றத்தாலும் அங்கிருக்கும் மற்ற கான் நடிகர்களுக்கு இணையாக பெரும் ரசிகர் கூட்டத்தினை வைத்துள்ளார். அவர் ஆசியாவின் கவர்ச்சிகரமான நாயகன் உள்பட பல விருதுகளையும் வாங்கியுள்ளார். 2016ல் உலகின் ஹேன்ட்ஸமான 3வது நாயகன் எனும் பாராட்டும் பெற்றார்.

இந்நிலையில், 'வேர்ல்ட்ஸ் டாப் மோஸ்ட்' எனும் பத்திரிகை நடத்திய உலக ஹேன்ட்ஸம் நாயகன் தேர்வில் ஹிரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருக்கிறார். ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், தைவான் நடிகர் காட்பிரே காவ், கிறிஸ் இவான்ஸ், டேவிட் போரியனஸ், கனடா நடிகர் நோவா மில்ஸ், ஹென்றி காவில், டாம் ஹிடில்ஸ்டன் மற்றும் சாம் ஹேவ்கான் ஆகியோர் இடம் பெற்ற இந்த கருத்துக்கணிப்பில் ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close