பத்மாவத் படத்துக்கு மற்றொரு தடை

  SRK   | Last Modified : 17 Jan, 2018 11:25 am


தீபிகா படுகோன் நடிப்பில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவத் படத்தின் மீதுள்ள சர்ச்சை இன்னும் முடிந்த பாடில்லை. படத்தில் ராஜ்புட் இன மக்களை புண்படுத்தும் காட்சிகள் உள்ளதாக பெரும் போராட்டங்கள் நடந்த பின், பத்மாவதி என்ற பெயரை பத்மாவத் என மாற்றியதோடு, மேலும் சில கத்தரி வேலைகளை செய்ய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பன்சாலி ஒப்புக்கொண்டார்.

இருந்தாலும், தங்கள் மாநிலங்களில் அந்த படம் வெளியாக தடை விதிப்பதாக ராஜஸ்தான், குஜராத், மற்றும் மத்திய பிரதேச  மாநில அரசுகள் தெரிவித்தன. இந்த பகுதிகளில்தான் படத்துக்கு எதிராக அதிகபட்ச போராட்டங்கள் நடந்தன. தற்போது, அந்த மாநிலங்களுடன், ஹரியானாவும் சேர்ந்துள்ளது. படத்தை பார்த்தபின் முடிவெடுக்கப்படும் என ஹரியானா மாநில முதல்வர் கட்டர் முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக படத்துக்கு தடை விதித்துள்ளதாக நிதியமைச்சர் கேப்டன் அபிமன்யூ தெரிவித்தார்.

இதனையடுத்து, பல்வேறு மாநிலங்களில் 'பத்மாவத்' படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. குஜராத், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் படத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தயாரிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close