பத்மாவத் தடைக்கு எதிராக வழக்கு

  SRK   | Last Modified : 18 Jan, 2018 07:50 am


இன்று உச்ச நீதிமன்றத்தில் பத்மாவத் திரைப்படத்துக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரிய வழக்கு விசாரணைக்கு வருகிறது. 

ராஜ்புட் இன மக்களை புண்படுத்துவதாகவும், ராணி பத்மினியின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாகவும் பத்மாவதி திரைப்படத்தின் மீது வட மாநிலங்களில் பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில், அந்த படத்தில் சர்ச்சைக்குரிய சில காட்சிகள் நீக்கியும், படத்தின் பெயரை பத்மாவத் என மாற்றியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டது படக்குழு.

ஆனால், தங்கள் மாநில மக்களை புண்படுத்தும் வகையில் இந்த படம் அமைந்துள்ளதாக கூறி, ராஜஸ்தான், குஜராத் ஹரியானா ஆகிய மாநில முதல்வர்கள், பத்மாவத் படத்துக்கு தடை விதித்துள்ளனர். இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பாளர்கள் வழக்கு தொடுத்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர், நீதிபதி சந்திரசூட் ஆகியோர் முன்னிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close