பத்மாவத் சர்ச்சை; தியேட்டரை அடித்து நொறுக்கி அட்டூழியம்!

  SRK   | Last Modified : 18 Jan, 2018 08:54 pm


தீபிகா படுகோன் நடித்த பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த சில ராஜ்புட் அமைப்புகளால், படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிட முடிவானது. ஆனாலும், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில், படத்தை வெளியிட அம்மாநில அரசுகள் தடை விதித்தன. 

 இன்று அந்த தடை உத்தரவை நீக்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே, பீகார் மாநிலத்தின் பாட்னா நகர் உட்பட பல பகுதிகளில் ராஜ்புட் அமைப்புகளுக்கு பயந்து, தனி தியேட்டர்கள் எதிலும் பத்மாவத் படத்தை வெளியிட முன்வரவில்லை. பாட்னாவில் ஒரே ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டரில் மட்டும் தான் படம் வெளியாக உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், முசாபர்பூர் பகுதியில் பத்மாவத் படம் வெளியாக இருப்பதாக கூறப்பட்ட ஒரு தனி திரையரங்கின் மீது கர்ணா சேவக் என்ற ராஜ்புட் அமைப்பின் உறுப்பினர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

அந்த அமைப்பின் தலைவன் லோகேந்திர சிங், பத்மாவத் படத்தை திரையிடும் தியேட்டர்கள், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்பு எச்சரித்திருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close