பிரபாஸ்-தீபிகா படுகோனே புதிய கூட்டணியா?

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 19 Jan, 2018 04:37 pm

பிரபாஸுடன்  நடிகை தீபிகா படுகோனே பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளததாக தகவல் வெளியாகி உள்ளது.

‘பாகுபலி’ படத்தினை தொடர்ந்து ‘சாஹு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். அருண் விஜய், ஜாக்கி ஷெராப், மந்த்ரா பேடி, நீல்நிதின் முகேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து, இன்னொரு இந்திப் படத்திலும் நடிக்க இருக்கிறார் பிரபாஸ். சில வருடங்களுக்கு முன்னர் இந்தப் படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருந்தாரம் பிரபாஸ். ஆனால், வேறு சில காரணங்களால் படம் தொடங்கவில்லை. இந்தநிலையில்தான், பிரச்னைகள் சரி செய்யப்பட்டு மீண்டும் பிரபாஸை அணுகியிருக்கிறது படக்குழு. சந்தோஷமாக ஓகே தெரிவித்தாராம் பிரபாஸ்.

இந்த படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகுபலி எனும் பிரமாண்ட வெற்றி திரைப்படத்தில் நடித்து செம ஃபார்மில் இருப்பதால் நடிகை தீபிகா பிரபாஸுடன் நடிக்க சம்மதிக்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் தற்போது  வந்திருக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close