பத்மாவத் படத்துக்காக விட்டுக்கொடுத்த அக்ஷய் குமார்!

  SRK   | Last Modified : 19 Jan, 2018 08:50 pm


சர்ச்சைகளுக்கு பிறகு பத்மாவத் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், அதே நாள் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாக இருந்த அக்ஷய் குமாரின் 'பேட் மேன்' படம், பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம், குறைந்த விலையில், பெண்களுக்கு நேப்கின் உற்பத்தி செய்யும் தொழிலை வளர்த்து விட்டு உலகம் முழுவதும் பிரபலமானவர். பத்ம ஸ்ரீ விருது பெற்றதோடு, சர்வதேச அளவில் பல மரியதைகளை பெற்றவர். இவர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு பாலிவுட் சூப்பர்ஸ்டார் அக்ஷய் குமார் நடித்துள்ள படம் 'பேட் மேன்'. மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ள இந்த படம், இந்த மாதம் வெளியாவதாக இருந்தது. 

தீபிகா நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவத் திரைப்படம் கடந்த வருட இறுதியில் வெளியாக இருந்த நிலையில், ராஜ்புட் அமைப்பினர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தள்ளிப் போனது. இந்த மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு பண்டிகை வார இறுதியில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

பேட் மேன் படமும் அதே நாள் வெளியாக இருந்ததால், இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதும் நிலை வந்தது. போராட்டங்கள் ஆரம்பம்பமானது முதலே, ஏறத்தாழ அனைத்து பாலிவுட் பிரபலங்களும், பன்சாலிக்கும், பத்மாவத் படத்துக்கும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இரண்டு படங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், பன்சாலியும், அக்ஷய் குமாரும் சேர்ந்து படங்களை வெளியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அக்ஷய் குமார், தனது படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடுவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதை இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி செய்தனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.