மறுபடியும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா ஸ்ரீதேவி?

  SRK   | Last Modified : 24 Jan, 2018 09:59 pm


பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் அறிமுகமாகி பின்னர், பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி, இந்தியாவின் முதல் பெண் சூப்பர்ஸ்டார் என அறியப்பட்ட நடிகை ஸ்ரீதேவி. 

அப்போதே மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பல விமர்சனங்களுக்கு ஆளானார் ஸ்ரீதேவி. அவர் முக பாவனை மாறியதனால் தான், தமிழ் படங்களில் அவருக்கு வாய்ப்பு குறைந்தது என்று கூட ஒரு பேச்சு உண்டு.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ் விங்கிலீஷ் படம் மூலம் சினிமாவுக்கு திரும்பிய ஸ்ரீதேவி, சமீபத்தில் 'மாம்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், திடீரென ஸ்ரீதேவி, உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஒரு நிருபர் அவரிடம் கேட்டபோது, திட்டவட்டமாக மறுத்தார்.

ஆனால், சமீபத்தில் வெளியான பல புகைப்படங்களை பார்க்கும்போது, ஸ்ரீதேவி உதட்டில் பெரிய மாற்றம் தெரிகிறது. ஏன் இப்படி செய்தீர்கள் 'ஸ்ரீதேவி', என சமூக வலைதளங்களில் அவரது ஆஸ்தான ரசிகர்கள் புலம்பித் தள்ளுகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close