மஜீத் மஜீதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ ட்ரெய்லர்

  பால பாரதி   | Last Modified : 30 Jan, 2018 06:49 pm


ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதியின் 'பியாண்ட் த க்ளவுட்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. 

கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை எப்படி நேசிக்கவேண்டும் என்பதை அழகியல் உணர்வுடன் சொல்வதில் கைதேர்ந்த ஈரானிய இயக்குநர் மஜீத் மஜீதி இப்போது 'பியாண்ட் த க்ளவுட்ஸ்' என்கிற படத்தை உருவாகியுள்ளார். மிகப்பெரிய  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தில் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். நாமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 


இந்தப் படம் ஒராண்டிற்கு முன்பு அதாவது  29 .1 .2017 அன்று மும்பையிலுள்ள முகேஷ் மில்லில் படப்பிடிப்புடன் தொடங்கியது. படப்பிடிப்புகள முடிந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு படப்பிடிப்புத் தொடங்கிய அதே நாளான நேற்று  மும்பையில் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. 

இதில், இயக்குநர் மஜீத் மஜீதி, நடிகர்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன்,கௌதம் கோஷ், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், நாமா பிக்சர்ஸ் பட நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஷரீன் மன்திரி கேடியா, கிஷோர் அரோரா மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சுஜாய் குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close