தீபிகா படுகோனேவை பாராட்டிய பாலிவுட் சூப்பர் ஸ்டார்

  பால பாரதி   | Last Modified : 05 Feb, 2018 02:40 pm


தீபிகா படுகோனேவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பாராட்டு மழையால் நனைத்துள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சித்தூர் ராணி பத்மினியாக நடித்திருக்கும் படம் 'பத்மாவத்'. இஸ்லாமிய மன்னன் அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மினி மீது மோகம்கொள்வது போன்ற காட்சிகள் படத்தில் இருப்பதாக கூறி இந்தப் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. படபிடிப்பு தளம் கூட அடித்து நொறுக்கப்பட்டது. தீபிகா படுகோனேவின் தலைக்கும் விலை வைக்கப்பட்டது. வட இந்தியாவில் போராட்டங்கள் வெடித்தன. 

தீபிகா படுகோனேவின் அழகையும், நடிப்பாற்றலையும் மட்டுமே நம்பி கோடிக்கணக்கான முதலீட்டில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாக்கப்பட்ட சரித்திரைக் கதைப் படமான 'பத்மாவாத்' படம், பல தடைகளைக் கடந்து சமீபத்தில் வெளியாகி, ரூ .150 கோடி வசூலித்துள்ளது. 'பத்மாவத்' படத்துக்கு தேசிய விருது கிடைக்கலாம் என்பது சினிமா விமர்சர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  


இந்நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் 'பத்மாவத்' படத்தையும், குறிப்பாக அதில் நாயகியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனேவையும் பாராட்டு மழையால் நனைத்திருக்கிறார். அவர் கைப்பட ஒரு பாராட்டுக் கடிதத்தையும் அனுப்பியுள்ளார். தனது நடிப்பை பாராட்டி அமிதாப் பச்சன் தன் கைப்பட முகவரியிட்டு அனுப்பிய கடிதத்தை தனது ‘இன்ஸ்ட்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள தீபிகா படுகோனே, ‘பல விருதுகள் இருக்கலாம். பல வெகுமதிகள் இருக்கலாம். ஆனால், எனக்கு இதைவிட பெரியது எதுவும் கிடையாது. இதற்கு நன்றி பாபா!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close