பிரபல பாலிவுட் நடிகர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

  SRK   | Last Modified : 08 Feb, 2018 10:07 am


முன்னாள் பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜிதேந்திரா மீது அவரது உறவினர் என கூறியுள்ள பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேச டி.ஜி.பி-யிடம் அந்த பெண் அளித்துள்ள புகாரில், 1971ம்  ஆண்டு, தனக்கு 18 வயதிருக்கும் போது, 28 வயதான ஜிதேந்திரா பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக கூறியுள்ளார்.

சுமார் 200 படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ஜிதேந்திரா, தற்போது பல படங்களையும், சீரியல்களையும் தயாரித்து வருகிறார். பாலிவுட்டின் மிகப்பெரும் புள்ளிகளில் ஒருவராக கருதப்படும் அவர் மீது எழுந்துள்ள இந்த புகார்கள், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ஆனால்,ஜிதேந்திரா தரப்பு வழக்கறிஞர் இந்த புகார் முற்றிலும் பொய் என தெரிவித்துள்ளார். "இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என ஜிதேந்திரா கூறியுள்ளார். ஆனாலும், எந்த ஆதாரமும் இல்லாமல், 50 வருடங்களுக்கு முன்  நடந்ததாக கூறப்படும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எந்த நீதிமன்றத்திலும் எடுபடாது" என அவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close