அமிதாப்பச்சன் ஆஸ்பத்திரியில் அனுமதி?

  பால பாரதி   | Last Modified : 10 Feb, 2018 09:46 am


பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நேற்று இரவு திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் பட உலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாக லைம் லைட்டில் இருந்து வருகிறார். சினிமா தவிர ஏராளமான விளம்பரப் படங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் தொகுத்து வழங்கிய ‘கோன்பனேகா குரோர்பதி’ என்ற கேம் ஷோ இந்தியா பிரபலமாகி அவரின் செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தியது. 

இந்நிலையில் அமிதாப்பச்சனின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அவர், நேற்று இரவு பந்திராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தகவல் பரவியது. 

அமிதாப்பச்சன், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று உடல் பரிசோதனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்றும்,   தற்போது, வழக்கமாக செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு தான் அவர் சென்றதாகவும் கூறப்படுகிறது. 


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close