ரன்பீர் சிங் அருகே இருக்கும் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சி - தீபிகா படுகோனே நெகிழ்ச்சி

  பால பாரதி   | Last Modified : 13 Feb, 2018 09:15 am


'எனக்கும், நடிகர் ரன்வீர் சிங்குக்கும் உள்ள உறவு பல கட்டங்களைத் தாண்டி வலுவாகி இருக்கிறது. அவர் பக்கத்தில் இருக்கும்போது ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருக்கிறது!' என நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், இலங்கையை சேர்ந்த ரன்வீர் சிங்கும் நீண்டநாட்களாக காதலித்து வருகின்றனர். 2013ல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான 'ராம் லீலா' படத்தில் ஜோடியாக நடித்த போது இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. சமீபத்தில், தீபிகா படுகோனேவின் பிறந்த நாளையொட்டி இருவரும் ரகசியமாக மோதிரம் மாற்றிக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், தீபிகா படுகோனே சினிமா, காதல் அனுபவங்கள் பற்றி ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது,“சினிமாவில் சாதிப்பதற்கு நடிகர்-நடிகைகள் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும்.சொந்த பந்தங்கள், குடும்பங்கள், நண்பர்களை விட்டு அவர்கள் விலகி இருக்க வேண்டும். நானும் அதற்கு தயாராக இருந்ததால்தான் இவ்வளவு உயர்ந்த இடத்துக்கு வர முடிந்தது. 

'பத்மாவத்' போன்ற படங்களில் நடித்தால் இன்னும் நிறைய கஷ்டப்பட வேண்டும். இவ்வளவு உழைத்தும் அந்த படத்துக்கு சர்ச்சை ஏற்பட்டது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. அதையும் மீறி படம் வெற்றிகரமாக ஓடி கஷ்டங்களை மறக்க செய்தது. 'பத்மாவத்' மாதிரி சரித்திரக் கதைகளை தவிர்த்து, சாதாரண பெண்ணாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சாதாரண பெண்கள்தான் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். கணவர், குழந்தைகள், அம்மா, மாமியார், மாமனார் என்று அனைவரையும் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால் அந்த பெண்களின் உழைப்புக்கு மரியாதை இல்லை. ஆண்களைத்தான் மதிக்கிறார்கள்.


சில உறவுகள் முறியும்போது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும். அந்த வேதனையை காலம்தான் குணப்படுத்தும். எனக்கும் அதுபோன்ற முறிவுகள் ஏற்பட்டு உள்ளன. அப்போது, எனது குடும்பத்தினரும் நண்பர்களும் துணையாக இருந்து அதில் இருந்து நான் மீண்டு வருவதற்கு உதவினார்கள். 

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு திருமணத்தில்தான் முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. எனக்கும், நடிகர் ரன்வீர் சிங்குக்கும் உள்ள உறவு பல கட்டங்களைத் தாண்டி வலுவாகி இருக்கிறது. அவர் பக்கத்தில் இருக்கும்போது ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வேறு எதுவும் ஞாபகம் வருவது இல்லை. எங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது. 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதில் இருந்து விடுபட்டு குடும்பத்தோடு இருக்க வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டு இருக்கிறது.

சரித்திர கதைகளை தவிர்த்து சாதாரண பெண்ணாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சாதாரண பெண்கள்தான் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். கணவர், குழந்தைகள், அம்மா, மாமியார், மாமனார் என்று அனைவரையும் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால் அந்த பெண்களின் உழைப்புக்கு மரியாதை இல்லை. ஆண்களைத்தான் மதிக்கிறார்கள்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.