பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான், சமீப காலமாக குதிரை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறாராம். குஜராத்தின் சூரத் பகுதியில் உள்ள ஒரு நபர் வைத்திருக்கும் அரிய வகை குதிரை சல்மான் கானின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உடனே அவரை தொடர்பு கொண்டு, சகாப் என்ற அந்த குதிரையை வாங்க பேரம் பேசியுள்ளார். 2 கோடி வரை தருவதாக சல்மான் கான் கூறியுள்ளாராம். சராசரியாக ஒரு பந்தய குதிரை லட்சக் கணக்கில் கொடுத்து வாங்கப்படும் நிலையில், இந்த குதிரைக்கு சல்மான் 2 கோடி கொடுக்க முன் வந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், குதிரையின் சொந்தக்காரர் சிராஜ் என்பவர் சல்மானுக்கு அதை விற்க முடியாது என கூறி மறுத்துவிட்டாராம். இந்த அரிய வகை குதிரை உலகிலேயே மொத்தம் 3 தான் உள்ளதாம். ஏற்கனவே 1 கோடி, 2 கோடி ஏன் சமீபத்தில் 3 கோடி கொடுத்து கூட குதிரையை கேட்டார்களாம். ஆனால், அதை விற்க முடியாது என சிராஜ் மறுத்துவிட்டாராம்.
மணிக்கு 42 கிமீ வேகத்தில் அந்த குதிரையால் நடக்க முடியுமாம். சில வருடங்களுக்கு முன் குட்டியாக இருந்த சகாப்பை, வெறும் 14.5 லட்ச ரூபாய்க்கு சிராஜ் வாங்கியுள்ளார். அதன்பின், சகாப் கலந்துகொண்ட அத்தனை பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளதாம். மற்ற குதிரைகளை விட நீண்ட நேரம் அதனால் ஓட முடியுமென்பது அந்த குதிரையின் மற்றொரு சிறப்பம்சம்.