ஸ்ரீதேவி மறைவு; ஆருடம் கூறிய அமிதாப் ட்வீட் - வியக்கும் நெட்டிசன்கள்

  PADMA PRIYA   | Last Modified : 25 Feb, 2018 12:06 pm

துபாயில் நடந்த நடிகர் மோஹித் மார்வாவின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதேவி திடீரென சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 

துபாய் நேரப்படி 11.30 மணியளவில் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்தத் தகவல் இந்திய நேரப்படி 3 மணியளவில்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்றிரவு 1.15 மணியளவில் நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில், ’’ஏதோ தவறாகத் தெரிகிறது.. வித்தியாசமான பதட்டம் நிலவுகிறது.. ஏன் என்று தெரியவில்லை’’ என்று இந்தியில் குறிப்பிட்டார். அவர் ட்வீட் செய்த அடுத்த சில நிமிடங்களில் ஸ்ரீதேவி மறைவு செய்தி வெளியானது. 


இதனையடுத்து அமிதாப் பச்சனின் ட்விட்டர் பதிவை, கிரிக்கெட் வீரர் ஜடேஜா உள்ளிட்ட நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்ததால் அந்த ட்வீட் வைரலானது. ஸ்ரீதேவியின் மறைவுப் பற்றி அமிதாப் பச்சனின் ஆருடம் தெரிந்ததாகவும், இதனை நம்பவே முடியவில்லை என்றும் நெட்டிசன்கள் பலர் தெரிவித்துள்ளனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close