எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இணையும் அபிஷேக் – ஐஸ்

  பால பாரதி   | Last Modified : 28 Feb, 2018 10:50 am


நட்சத்திர தம்பதியான அபிஷேக்பச்சன் – ஐஸ்வர்யாராய், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.

ராவணன், சீதையை சிறை எடுத்து சென்ற இராமாயண கதையை தழுவி,  இயக்குநர் மணிரத்னம் ‘ராவணன்’படத்தை எடுத்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் தமிழ், இந்தி மொழிகளில் தயாரானது. தமிழில், விக்ரம் – ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்திருந்தனர். ‘ராவண்’ என்கிற டைட்டிலுடன் வந்த இந்தி படத்தில் ஐஸ்வர்யாராய் ஜோடியாக அபிஷேக்பச்சன் நடித்திருந்தார்.            

பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதியான அபிஷேக்பச்சன் – ஐஸ்வர்யாராய், ‘ராவண்’படத்துக்குப் பிறகு வேறு எந்தப் படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை! 


இந்நிலையில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நட்சத்திர ஜோடி, ஒரு இந்திப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்த ஒரு காவல்துறை தம்பதி பற்றிய கதையில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் இருவருமே போலீஸ் அதிகாரிகளாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை சைலேஷ் ஆர்.சிங் என்பவர் இயக்குகிறார். இந்த உண்மைக்கதைக்கான ஸ்கிரிப்ட் தயாராக நிலையில் இருப்பதாகவும், இதில் நிஜ தம்பதிகளான அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close