கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா

  Shalini Chandra Sekar   | Last Modified : 15 Mar, 2018 12:23 pm


பிரியங்கா சோப்ரா கடைசியா 2016-ம் ஆண்டு 'ஜெய் கங்காஜல்' என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு போஜ்பூரி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் பிரியங்கா. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இந்தியில் பிரியங்காவுக்கு எந்தப் படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஸோ, பிரியங்காவின் பாலிவுட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். 

இப்போது இவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா, விண்வெளி விஞ்ஞானி 'கல்பனா சாவ்லா'வின் வாழ்க்கை வரலாற்றில் தான் நடிக்க இருக்கும் விஷயத்தைத் தெரியப் படுத்தினார். அறிமுக இயக்குநர் பிரியா மிஸ்ரா என்பவர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இதற்காகக் கடந்த 7 வருடங்களாகக் 'கிரவுண்ட் ஒர்க்' செய்தாராம் இயக்குநர். புதிய தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க முன் வந்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாகியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close