மூளை புற்றுநோய்: ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய இர்ஃபான்

  Shalini Chandra Sekar   | Last Modified : 17 Mar, 2018 05:03 pm


பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கானுக்கு மூளையில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அவருடைய உருக்கமான ட்விட்டர் பதிவைக் கண்டு ரசிகர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். அவருக்காக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

தனது கதாப்பாத்திரத்தோடு ஒன்றி இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தும் குறிப்பிட்ட நடிகர்களுள் பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானும் முக்கியமானவர். 'பான் சிங் தோமர்' என்ற படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக 2012-ல் தேசிய விருது பெற்றவர். 

2011-ல் பத்மஶ்ரீ விருது வழங்கி இந்திய அரசு இவரை கெளரவித்துள்ளது. ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 'ஸ்லம்டாக் மில்லியனரி' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். 

இவருடைய நடிப்பில் 'பிளாக் மெயில்' என்ற படம் ஏப்ரல் 6-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இப்போது இவருடைய ஒரு ட்வீட் ரசிகர்களை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 'நியூரோ என்டோக்ரைன் ட்யூமர் (கேன்சர்)' என்ற நோய் தனக்கிருப்பதாக கண்டுப்பிடிக்கப் பட்டிருக்கிறது. கொஞ்சம் கஷ்டம் தான், ஆனால் என்னை சுற்றியிருப்பவர்களின் அன்பும் வலிமையும் என்னுள் நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. இந்த பயணம் என்னை வேறு நாட்டிற்கு கூட்டி வந்திருக்கிறது.

உங்களது பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் தொடர்ந்து அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். இங்கு நியூரோ என்பது மூளையைப் பற்றியதல்ல. என் வார்த்தைகளுக்காக காத்திருப்பவர்களுக்கு, அடுத்த முறை வேறு கதை சொல்கிறேன். ஆம் உங்களிடம் சொல்ல என்னிடம் நிறைய கதை இருக்கிறது' என உணர்வுப்பூர்வமாக அந்த ட்வீட்டில் பகிரப்பட்டுள்ளது. 

நியூரோ என்டோக்ரைன் ட்யூமரைப் பற்றி தெரிந்துக் கொள்ள நாம் கூகுள் செய்தோம், 'நம்முடைய மூளையில் ஹைபோதாலமஸ், பிட்யூட்டரி என்ற இரண்டு நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. நம்முடைய உடல் வளர்ச்சி முதல் அனைத்துக்கும் இந்த நாளமில்லா சுரப்பிகள் செயல்பாடுதான் காரணம். இந்த சுரப்பிகளில் ஏற்பட்ட மாற்றம்தான் புற்றுநோய். 

பொதுவாக நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படக் கூடிய புற்றுநோய் என்பது கணையத்தில்தான் ஏற்படும். கணையத்தில் இருந்து நுரையீரல், வயிறு, இரைப்பை என பல பகுதிகளுக்கு பரவும். ஆனால், இவருக்கு, மூளையில் ஏற்பட்டுள்ளது மிகவும் சிக்கலானது என்கின்றது. 

விரைவில் மீண்டு வருக, எங்களுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும்...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.