அக்‌ஷய்யின் புதிய ஹீரோயின் இவர் தான்

  Shalini Chandra Sekar   | Last Modified : 23 Mar, 2018 12:40 pm


டாய்லெட், பேட்மேன் என முக்கியத்துவமுள்ள படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் அக்‌ஷய் குமார். தற்போது 2.0, கோல்ட், மொகுல், கேசரி ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

இவரது நடிப்பில் பாலிவுட்டில் மிகவும் ஹிட்டான படம் ஹவுஸ்ஃபுல் 1, 2, 3 ஆகிய பாகங்கள். 2010ல் இதன் முதல் பாகம் எடுக்கப் பட்டது, தொடர்ந்து 2012 ல் இரண்டாம் பாகம், 2016ல் மூன்றாம் பாகம் ரிலீஸானது. முழுக்க முழுக்க காமெடி படமான இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 


தற்போது படத்தின் நான்காம் பாகத்துக்கான வேலைகள் அதிவேகமாக நடந்துக் கொண்டிருக்கின்றன. இதன் தயாரிப்பாளர் சாஜித் நாடியட்வாலா, 'எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பொருட்செலவில் இந்த காமெடி படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்' என தெரிவித்திருந்தார். இப்போது இந்த பாகத்தில் அக்‌ஷய்க்கு ஜோடியாக க்ரிடி சனோன் நடிக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது. 

வெல்கம்...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close