பாலிவுட் ஹீரோவுடன் மறுபடியும் ஜோடிசேரும் ஸ்ருதிஹாசன்

  பால பாரதி   | Last Modified : 31 Mar, 2018 11:47 am


பிரபல பாலிவுட் ஹீரோ வித்யூத் ஜாம்வால் உடன், நடிகை ஸ்ருதிஹாசன் மறுபடியும் ஜோடி சேர்ந்திருக்கிறார்.    

கமல் மகள் ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவருக்கு தமிழ், தெலுங்கில் சான்ஸ் இல்லாததால் மீண்டும் பாலிவுட் பட உலகம் பக்கமாக தனது கவனத்தை திருப்பியுள்ளார்.       

பாலிவுட் இயக்குநர் மகேஷ் மஞ்ரேகர் தற்போது ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதில், பிரபல பாலிவுட் ஹீரோ வித்யூத் ஜாம்வால் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நஸ்ருதின் ஷா, அமோல் பலேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்படிப்பு விரைவில் துவங்க உள்ளது.


இந்தப் படத்தில் வித்யூத் ஜாம்வால் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.    

ஏற்கெனவே, ‘யாரா’என்ற படத்தில் வித்யூத் ஜாம்வால் – ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இந்நிலையில் வித்யூத் ஜாம்வால் உடன், ஸ்ருதிஹாசன் மறுபடியும் ஜோடி சேர்ந்திருக்கிறார்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close