தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பாடிய பாலிவுட் நடிகர்

  பால பாரதி   | Last Modified : 04 Apr, 2018 11:22 am


இசையமைப்பாளரான தேவி ஸ்ரீபிரசாத், பாலிவுட் நடிகர் மற்றும் பாடகரான ஃபர்ஹான் அக்தரை முதன்முதலில் தென்னிந்திய மொழிகளில் பின்னணி பாட வைத்திருக்கிறார்.

பாலிவுட் படஉலகில் முன்னணி இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமைக் கொண்டவர் ஃபர்ஹான் அக்தர். இவர், முதன் முதலில் தென்னிந்திய மொழியில் தயாரான ‘பரத் அனே நேனு’என்ற படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையில் பின்னணி பாடியிருக்கிறார். 

இது குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் கூறுகையில், " பிரபல பாலிவுட் பாடகர்கள் மில்கா சிங், அப்பச்சே இந்தியன், அட்னன் ஷமி, பாபா செகல் போன்றவர்களை தென்னிந்திய மொழிகளில் பாட வைத்திருக்கிறேன். அந்த அடிப்படையில், ஃபர்ஹான் அக்தரை தென்னிந்திய மொழிகளில் பாடகராக அறிமுகப்படுத்த நினைத்தேன். மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு விருது விழாவில் அவரை சந்தித்த போது, எனது ஆசையை கூறினேன்.அதற்கு அவர், 'எனக்கு விருப்பம் இருந்தாலும் மொழிப் பிரச்னை இருக்கிறதே?' என தயங்கினார். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, விடாப்பிடியாக அவரின் சம்மதத்தை பெற்றேன்.   

மகேஷ் பாபுவின் ‘1நேநோக்கடுனே’என்ற படத்தில் வரும் ‘Who are you..’என்ற பாடலைத்தான் ஃபர்ஹான் அக்தர் பாடுவதாக இருந்தது. ஆனால்,அது முடியாமல் போனது. பிறகு,மகேஷ் பாபுவின் ‘பாரத் அனே நேனு’ என்ற படத்தில் வரும் ‘I Dont Know..’ பாடலை ஃபர்ஹான் அக்தரை பாடவைத்தேன். அவர், 'தெலுங்கு மொழி உச்சரிப்பு எப்படி இருக்குமோ?' என்கிற கவலையில் இருந்தார். ஆனால், அவர் பிரமாதமாக பாடி அந்த ஆச்சரியப்படுத்தினார்.இந்த பாடல்,வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. ஃபர்ஹான் அக்தருடனான இசைப்பயணம் மேலும் தொடரும்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close