தன் கணவருக்கு சன்னி லியோனின் திருமண வாழ்த்து என்ன தெரியுமா?

  கனிமொழி   | Last Modified : 11 Apr, 2018 04:44 pm


தனது கரியர் மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டிலும் சக்சஸ்ஃபுல்லாக இருக்கும் சில நடிகைகளுள் சன்னி லியோனும் ஒருவர். தனது கணவர் டேனியல் வெபரின் ஆதரவினால் தான் எல்லாவற்றையும் தைரியமாக எதிர்க்கொள்வதாக நிறைய முறை சன்னியே கூறியிருக்கிறார். 

இன்று இவர்களின் ஏழாவது திருமண நாள். அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவர்களது திருமண ஃபோட்டோவைப் பகிர்ந்து, "வாழ்க்கை நம் மீது எதை வீசினாலும், என்ன நடந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பு மட்டுமே செலுத்துவது என 7 வருடம் முன்பு கடவுள் முன்பு சபதம் ஏற்றோம். எப்போதயும் விட இன்று உங்களை அதிகம் நேசிக்கிறேன். இந்த ஆசையான பயணத்தை அன்போடு தொடர்வோம். லவ் யூ சோ மச் டேனியல், ஹேப்பி அனிவர்சரி" என தன் அன்பை வெளிக்காட்டியுள்ளார் சன்னி லியோன். 

வாழ்த்துகள்...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close