ஹீரோவுக்கு ராப் இசை கற்றுக் கொடுத்த குடிசைவாசிகள்!

  பால பாரதி   | Last Modified : 12 Apr, 2018 06:04 pm


ஈரானிய பட இயக்குநர் மஜீத் மஜிதியின் ஹீரோவுக்கு, குடிசைப்பகுதி இளைஞர்கள் ராப் இசை கற்றுக் கொடுத்துள்ளனர்.  

ஈரானிய படங்களின் வாயிலாக உலகப்புகழ் பெற்ற இயக்குநராக அடையாளப்படுத்தப் பட்டிருக்கும்  இயக்குநர் மஜீத் மஜிதி இப்போது ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ என்ற இந்திப் படத்தை இயக்கி வருகிறார். இதில், புது முகங்கள் இஷான் கட்டார், மாளவிகா மோகனன் நாயகன் நாயகியாக அறிமுகமாகின்றனர். ஜீ ஸ்டுடியோ மற்றும் நாமா பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் 'பியாண்ட் த  க்ளவுட்ஸ்' திரைப்படம் ஏப்ரல் மாதம் 20 ம் தேதி வெளியாகிறது. 

இந்நிலையில்,இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நாயகன் இஷான் கூறுகையில், "யாருக்குமே கிடைக்காத அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இந்தப்  படத்தில் அமீர் என்ற தாராவிப்  பகுதியில் சுற்றித்திரியும் இளைஞனாக நடித்திருக்கிறேன்.படத்தின் இயல்பு தன்மைக்காக தா ராவிப் பகுதி இளைஞர்களுடன் பழகி, அவர்களுடன் நட்பு பாராட்டி, நிஜமாகவே அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபனாக மாறினேன்.


இதில் தாராவி பகுதியில் வசிக்கும் ஏராளமானவர்கள் படத்தில் தோன்றியிருக்கிறார்கள். அதில் எனக்கு  நண்பனாக வந்த ஆகாஷ் நிஜமாகவே நெருக்கமான நண்பனாகிவிட்டார். தாராவி பகுதி மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? அவர்களின் உடல் மொழி, பேச்சு, பாவனை போன்றவற்றை கவனித்து அதை நடிப்பில் கொண்டு வர செய்தார் இயக்குநர். 

அங்குள்ள இளைஞர்கள் பலருக்கு ராப் இசை தெரிகிறது. அவர்களோடு பழகி ராப் பாடலை கற்றுக் கொண்டேன். படத்துக்காக குத்துச்சண்டை போடவும் பயிற்சி பெற்றேன். படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும் இப்போதும் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்" என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close