மகள் வயது பெண்ணை திருமணம் செய்த வில்லன் நடிகர்!

  பால பாரதி   | Last Modified : 23 Apr, 2018 02:02 pm


 மகள் வயதுள்ள இளம் பெண்ணை காதல் திருமணம் செய்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன்.

தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில், சரத்குமார் - ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 'பச்சைக் கிளி முத்துச்சரம்', கார்த்தியின் ‘பையா’ மற்றும் ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்களில்வில்லனாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன். இந்தி மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வருவதோடு, இந்தியாவின் பிரபல மாடலாகவும் இருக்கிறார்.

52 வயதாகும் மிலிந்த் சோமன், மகள் வயது உள்ள அங்கிதா என்கிற 26 வயது இளம் பெண்ணை கடந்த 2014ம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். இடையில் அந்தப் பெண்ணுடனான காதல் முறிந்து விட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து சமீபத்தில், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது காதலை உறுதிப்படுத்தினார். மேலும் சீக்கிரமே தனது காதலியை கை பிடிக்கப் போவதாகவும் கூறியிருந்தார் மிலிந்த் சோமன்.  


இந்நிலையில், 26 வயதாகும் அங்கிதாவை,52 வயதாகும் மிலிந்த் சோமன் நேற்று திருமணம் செய்துகொண்டார்.

மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் இவர்களது திருமணம் நேற்று நடந்தது. இதில், இருவரது குடும்பத்தார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

ஏற்கனவே பிரெஞ்சு நடிகை மைலன் ஜம்பனோயை திருமணம் செய்துக்கொண்ட மிலிந்த் சோமன்,அவரை கடந்த 2009 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close