• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

அர்ஜுன் ரெட்டி இந்தி ரீமேக்கில் யார் நடிக்கிறார் தெரியுமா?

  கனிமொழி   | Last Modified : 25 Apr, 2018 07:50 pm


கடந்த வருடம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டானப் படம் 'அர்ஜூன் ரெட்டி'. இதனை அறிமுக இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கி, தனது முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஹீரோவாக விஜய் தேவரகொன்டாவும், ஹீரோயினாக ஷாலினி பாண்டேவும் நடித்திருந்தார்கள். 

அர்ஜுன் ரெட்டி தெலுங்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழில் ரீமேக் செய்வதாக இயக்குநர் பாலா அறிவித்தார். அதன்படி நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுக நாயகனாக நடிக்க, இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. 

இதனையடுத்து பாலிவுட்டில் அர்ஜூன் கபூர் நடிப்பில் ரீமேக் செய்யப் படுவதாக  செய்திகள் வெளியானது. ஆனால் உறுதிப் படுத்தப் பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் ஹீரோவாக நடிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் ஆடிஷன் நடந்து வருகிறதாம். அஷ்வின் வர்தே மற்றும் முராத் கெதானி தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்தத் திட்டமிட்டுருக்கிறார்களாம். அதோடு படத்தை வரும் ஜூலையில் வெளியிட புயல் வேகத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்களாம். 

பாலிவுட்டுக்கு ஏத்த மாதிரி டைட்டிலை மாத்திடுவாங்களோ...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close