கரீனா கபூர்-சோனம் கபூர் இணைந்து நடிக்கும் படத்தின் டிரெயிலர் வெளியீடு

  கனிமொழி   | Last Modified : 27 Apr, 2018 03:25 am


கரீனா கபூர், சோனம் கபூர், ஸ்வரா பாஸ்கர், ஷிகா தல்சானியா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'வீரே தி வெட்டிங்'. இதனை இயக்குநர் ஷஷங்கா கோஷ் இயக்குகியிருக்கிறார். 2016 ஜூனில் ஆரம்பிக்கப் பட்ட இந்தப் படம் கரீனா கபூர் கர்ப்பமானதால் தாமதப் படுத்தப் பட்டது. 

குடும்பத்தை விட நட்புக்கு முக்கியத்துவம் தரும் நான்கு தோழிகளை மையப்படுத்திய காமெடி படமாக இதனை உருவாக்கியிருக்கிறார்கள். 

சோனம் கபூரின் அக்கா ரேகா கபூர் இதனை தயாரிக்கிறார். ஏக்தா கபூர், ஷோபா கபூர், நிகில் திவேதி இதன் இணை தயாரிப்பாளர்கள். 

படத்தின் டிரெயிலர் தற்போது வெளியாகியிருக்கிறது, வெளியான 20 மணி நேரத்தில் 12 மில்லியன் ரசிகர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் நடைப்பெற்று வருவதால், ஜூன் முதல் தேதி இந்த வீரே தி வெட்டிங் ரிலீஸ் ஆகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

ஃபீமேல் பட்டீஸ்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close