இந்தியா பாலியல் குற்றவாளிகளின் மண்ணாகி விட்டது - மல்லிகா ஷெராவத்

  கனிமொழி   | Last Modified : 27 Apr, 2018 05:46 pm


இந்தியாவில் தற்போது 'கேங் ரேப்' அதிகரித்து வருகிறது. காஷ்மீர் ஆசிஃபா, டெல்லி கீதா என நாளுக்கு நாள் இந்த வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதில் பெருங்கொடுமை என்ன வென்றால் விபரம் தெரியாத குழந்தைகளையும் அந்த கொடூரன்கள் விட்டு வைக்காதது தான்.

இதை எதிர்த்து நாடு முழுவதும் குரல்கள் எழும்பியிருக்கும் நிலையில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்தும் இது குறித்துப் பேசியுள்ளார். 

"பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நம் நாட்டில் நடக்கும் விஷயங்கள் நிச்சயமாக வெட்கக் கேடானது. காந்தி பிறந்த மண், இப்படி கயவர்கள் நிறைந்த மண்ணாக மாறியிருப்பதை நினைத்தால் ,மனது வலிக்கிறது. மீடியாவினால் தான் இந்த மாதிரியான சம்பவங்களை வெளியில் கொண்டு வர முடிகிறது. ஊடகங்கள் மட்டும் இல்லை என்றால், இந்த மாதிரியான எந்த ஒரு விஷயமும் வெளியில் வரமலே போயிருக்கும். அதனால் மீடியாக்களுக்கு நமது நன்றியை தெரிவிக்க வேண்டும். இருந்தாலும் குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்காததின் விளைவுகளை தினந்தோறும் செய்தி தாள்களில் பார்க்க முடிகிறது" என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி பேசியுள்ளார். 

நல்லா சொல்லுங்க...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close