மீண்டும் படம் இயக்க தயாராகும் பிரபு தேவா

  பால பாரதி   | Last Modified : 11 Mar, 2018 03:19 pm

சில வருடங்கள் இயக்குநர் நாற்காலிக்கு ஓய்வு கொடுத்து விட்டு நடிப்பதில் ஆர்வமாக இருந்த பிரபு தேவா, மீண்டும் படம் இயக்க தயாராகிவிட்டார்.

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பிரபு தேவாவுக்கு பல முகங்கள் உள்ளன. விஜய் நடித்த, 'போக்கிரி' படத்தின் மூலமாக இயக்குநர் அவதாரம் எடுத்தார். இந்தபடத்தின் அதிரடி ஹிட்டுக்குப் பிறகு பாலிவுட் பட உலகத்துக்குப் போன பிரபுதேவா, 'போக்கிரி' யை 'வான்டட்' என்கிற பெயரில் சல்மான்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். சல்மானின் கேரியரில் மிகப் பெரிய ஹிட்டாக அந்தபடம் அமைந்தது. பிரபு தேவாவும் பாலிவுட்டில் 'மோஸ்ட் வான்டட்' டைரக்டராக மாறினார்.


பிறகு, சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்த 'தபங்' படமும் மிகப் பெரிய ஹிட்டானது, தமிழில் 'ஒஸ்தி' எனவும், தெலுங்கில் 'கப்பர்சிங்' எனவும் ரீமேக் ஆனது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் 'தபங் 2' படத்தை உருவாக்கிய போது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது, இந்தப் படத்தின் மூன்றாம் பாகத்திற்காகதான் இணைய இருக்கிறது சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணி! .பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சல்மான் கானை இயக்க இருக்கிறார் பிரபுதேவா.

தற்போது, நடிப்பில் பிஸியாக இருக்கும் பிரபுதேவா விரைவில் இப்படத்தின் இயக்குநர் பணியில் இணைய இருக்கிறார். இது குறித்து அளித்த பேட்டி ஒன்றில், "ஆம், நான் 'தபங் 3' படத்தை இயக்குகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார் பிரபுதேவா. முதல் இரண்டு பாகங்களில் நடித்த எல்லா நட்சத்திரங்களும் மூன்றாம் பாகத்திலும் தொடர இருக்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாகுமாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close