பாலிவுட்டில் கண் அழகி பிரியா வாரியர்

  Shalini Chandra Sekar   | Last Modified : 12 Mar, 2018 05:19 pm


கண்ணைச் சிமிட்டி சிமிட்டி அனைவர் மனதையும் கொள்ளைக் கொண்டவர் மலையாள நடிகை பிரியா வாரியர். 'ஜிமிக்கி கம்மல்' ஷெரிலைத் தொடர்ந்து, ஒரே நாளில் ஓஹோவென இன்டர்நெட்டில் வைரல் ஆனவர். 

தனது இன்டர்வியூக்களில் தான் 'ரன்வீர் சிங்கின்' தீவிர விசிறி என்று சொல்லி வந்தார். அதோடு அவருடன் நடிப்பது தன்னுடைய கனவு என்றும் சொன்னார். இந்த 18 வயது பதுமையின் குரல் தற்போது ரன்வீர் சிங்கின் தயாரிப்பாளர் காதில் ஒலித்திருக்கிறது. 

ஆம்! ரன்வீர் சிங் புதிதாக நடிக்கும் படம் 'சிம்பா'. இதன் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இதன் இணை தயாரிப்பாளர் கரன் ஜோஹர். இந்த லேட்டஸ்ட் வைரல் பெண்ணை நடிக்க வைக்கலாம் என்று நினைத்த கரன், இதை இயக்குநரிடம் சொல்ல, அவரும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால் ஒரு வருத்தமான செய்தி, இதில் பிரியாவுக்கு பெரிய ரோல் இல்லையாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close