உளவாளியாக ஆலியா பட்: ராஸி பட ஸ்டில் வெளியானது!

  Shalini Chandra Sekar   | Last Modified : 15 Mar, 2018 01:09 pm


பாலிவுட் குயின் ஆலியா பட் தற்போது,  'ராஸி' என்ற படத்தில்  நடித்து வருகிறார். மேக்னா குல்சர் இயக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 1971ல் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானுக்கு திருமணமாகிப் போகும் காஷ்மீர் பெண்ணாக நடிக்கிறார் ஆலியா. 


பார்ப்பதற்கு அப்பாவி பெண்போல் இருக்கும் ஆலியா, பாகிஸ்தானில் நடக்கும் விஷயங்களை இந்தியாவுக்குத் தெரிவிக்கும் உளவாளியாக 'எக்ஸ்ட்ராடினரி' கேரக்டரில் நடிக்கிறார். ஆலியாவின் பிறந்தநாளான இன்று அந்த கேரக்டரை வெளிப்படுத்தும் விதமாக, சம்பந்தப்பட்ட கதாப்பாத்திர ஃபோட்டோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர் 'ராஸி' படக்குழுவினர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close