புதிய பரிணாமத்தில் சல்மான் கான்

  Shalini Chandra Sekar   | Last Modified : 17 Mar, 2018 04:46 pm

பெண்களின் கனவு நாயகன் சல்மான் கான் பாலிவுட்டில் தற்போது, 'ரேஸ் 3' என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் நடிக்கிறார். இதனை இயக்குநர் ரெமோ டிஸோஸா இயக்குகிறார். 

இந்தப் படத்தை 'டிப்ஸ் பிலிம்ஸ் ' என்ற தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து தனது 'சல்மான்கான்  பிலிம்ஸ்' பேனரில் சல்மான் கான் தயாரிக்கிறார்.  அதோடு இவர் இதில் முதன்முறையாக இன்னொரு அவதாரத்தையும் எடுத்திருக்கிறார். 

ஆமாங்க, படத்தில் வரும் ரொமான்டிக்கான பாடலை தானே எழுதி, பாடலாசிரியராகவும் தனது புதிய கிளையைத் தொடங்கியிருக்கிறார். அவர் எழுதியிருக்கும் அந்த பாடலின் படப்பிடிப்பை துபாயில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் ரெமோ. 

இப்படியே போனா எப்புடி..? கரென்ட் கேர்ள் ஃபிரெண்ட் யாருன்னு சொல்லுங்க சல்மான் பாய்...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close