மீண்டும் இணையும் ஹ்ரித்திக் - காத்ரீனா ஜோடி...

  Shalini Chandra Sekar   | Last Modified : 22 Mar, 2018 07:41 pm


ஹ்ரித்திக் ரோஷன் - காத்ரீனா கைஃப் நடிப்பில் 2014ல்  வெளியாகி மெகா ஹிட்டான படம் 'பேங் பேங்'. 'நைட் அண்ட் டே' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் இந்தப் படம். ஆக்‌ஷன் - காமெடியாக இதனை இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். 

140 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 365 கோடிக்கு மேல் வசூலித்து 'பாக்ஸ் ஆஃபிஸ்' ஹிட்டானது. தற்போது வந்த தகவலின் படி, 'பேங் பேங் ரீலோடட்' என்ற டைட்டிலை படக்குழுவினர் ரெஜிஸ்டர் செய்து வைத்துள்ளார்களாம். இயக்குநரும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம். இதிலும் ஹ்ரித்திக் - காத்ரீனா ஜோடியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்ததும் அந்த சூப்பர் ஹாட் ஜோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறார்களாம். 

இதுலயும் பெப்பி டான்ஸ், ஆக்‌ஷன் சீக்வென்ஸ் இருக்குல்ல...?

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close