காச நோயால் அவதிப்படும் நடிகைக்கு உதவிய நடிகர்

  பால பாரதி   | Last Modified : 24 Mar, 2018 01:11 pm


காசநோய் தாக்கி மும்பையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள  இந்தி நடிகை பூஜா தட்வாலுக்கு, நடிகர் ரவி கிஷன் உதவியுள்ளார்.

பிரபல இந்தி நடிகை பூஜா தட்வால், இவர் சல்மான்கானுடன் ‘வீர்காடி’ என்ற இந்தி படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும், ‘இந்துஸ்தான்’,‘சிந்தூர் கி கவுகாந்த்’போன்ற படங்களிலும்கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை பூஜா தட்வால், காசநோய் தாக்கி மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல் நிலை மோசம் அடைந்து வருவதை அறிந்து கணவரும், குடும்பத்தினரும் அவரை விட்டு விலகி சென்று விட்டனர். சாப்பிடவும் மருந்து வாங்கவும்  கையில் பணம் இல்லாமல் தவிக்கும்  பூஜா தட்வாலின் பரிதாபமான நிலையைக் கண்டு, ஆஸ்பத்திரியில் இருக்கும் சிலர் பரிதாபப்பட்டு அவருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். 


தனது நிலை குறித்து பேசி, வீடியோ ஒன்றை பூஜா தட்வால் சமூக வலைத் தளத்தில் வெளியிட்டார். அதில் 6 மாதங்களுக்கு முன்பே தனக்கு காசநோய் வந்துவிட்டது என்றும், சல்மான்கானிடம் உதவி பெற முயற்சித்தேன். ஆனால், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைப் பார்த்த இந்தி நடிகர் ரவி கிஷன், அவருக்கு உதவ முன்வந்தார். தனது உதவியாளர்களை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பண உதவி செய்தார்.

பூஜா தட்வாலும், ரவி கிஷனும் 1997-ல் வெளியான ‘தம்ஸ் பியார் கோ கையா’என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். சல்மான்கானிடம் இருந்து பூஜா தட்வாலுக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close