18 வருடங்களுக்குப் பிறகு இந்தியில் ரீ-மேக் ஆகும் 'ஹேராம்'

  பால பாரதி   | Last Modified : 05 Apr, 2018 01:43 pm


கமல்ஹாசனின் 'ஹேராம்' படம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீ-மேக் ஆகிறது. 

கமல்ஹாசன் எழுதி இயக்கி தயாரித்து ஹீரோவாக நடித்து, 2000-ல் வெளியான படம் `ஹேராம்'. இந்தப் படத்தில் கமல் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி நடித்திருந்தார். அப்போது, பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.   

இந்தப் படத்தில் அரசியல் சாடல்கள் நிரம்பியிருந்ததால், அரசியல் ரீதியாகவும் பல பிரச்னைகளை சந்த்தித்தது. இதை மிகப்பெரிய வெற்றிப் படம் என்று சொல்லமுடியாமல் போனாலும், கமல்ஹாசனின் மாஸ்டர் பீஸ் படங்களில் ஒன்றாக இருந்தது. தமிழில் வெளியான பின் இந்தியிலும் டப் செய்யப்பட்டது. 


இந்நிலையில், 'ஹேராம்' படம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீ-மேக் ஆகிறது. 

கடந்த வாரம் மும்பையில், கிறிஸ்டோபர் நோலனைச் சந்தித்த கமல், அவருக்கு `ஹேராம்' படத்தின் டிவிடி-யைக் கொடுத்துள்ளார். அதே விழாவில், ஷாருக் கானை சந்தித்த கமல் நலம் விசாரித்தார். அப்போது,`ஹேராம்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிக்கும்படியும் ஷாருக்கான் கேட்க, புன்னகை செய்த கமல்,`அந்தச் சமயத்தில், என்னுடன் நடித்த ஷாருக்கிற்கு ஒரு சின்ன கைக்கடிகாரத்தைத் தவிர கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை. இப்போது அவர், கைக்கடிகார நிறுவனத்துக்கே பிராண்ட் அம்பாசடர்.`ஹேராம்' படத்தை இந்தியில் ரீ-மேக் செய்வது எனக்கு மிகவும் சந்தோஷம்" என பெருமிதத்துடன் சொல்லி, படத்துக்கான உரிமையையும் வழங்கி உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close