கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டான படம் 'ஸ்டூடெண்ட் ஆஃப் தி இயர்'. சித்தார்த் மல்ஹோத்ரா, வருண் தவானுடன் இணைந்து ஆலியா பட் நடித்திருந்தார். அதோடு இது தான் ஆலியாவின் முதல் படமும் கூட.
6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதனை இயக்குநர் புனித் மல்ஹோத்ரா இயக்க, கரண் ஜோஹர் தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக டைகர் ஷெரஃப் நடிக்கிறார். முதல் பாகத்தில் எடுத்த தேராடூனிலுள்ள செயிண்ட் தெரெஸா ஸ்கூலில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.
தேராடூன், முஸோரி, ரிஷிகேஷ் ஆகியப் பகுதிகளில் முதல் ஷெட்யூலை முடித்தப் பிறகு புனேவில் அடுத்த ஷெட்யூலை எடுத்துவிட்டு, வரும் நவம்பர் 23-ம் தேதி திரையிட முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.