வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்ட பிரபல நடிகை!

  பால பாரதி   | Last Modified : 10 Apr, 2018 06:30 pm


பிரபல நடிகை திஷா பதானி, வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் சிரமப்பட்டதாக சொல்லி அதிர வைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை படமான ‘டோனி’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் திஷா பதானி. பாலிவுட் நடிகையான இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்திப் படம் ‘பாகி 2’ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

மேலும், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள ‘சங்கமித்ரா’ படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் திஷா பதானி.

இந்த நிலையில், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிய திஷா பதானி, வாடகை கொடுக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டதாக கூறியிருக்கிறார்.

இது குறித்து திஷா பதானி ஒரு பேட்டியொன்றில் கூறுகையில், “கல்லூரி படிப்பை விட்டுவிட்டு சினிமா நடிகையாகும் ஆசையில் நான் மும்பைக்கு தனியாக வந்தேன். வெறும் ரூ.500 தான் அப்போது என்னிடம் இருந்தது. அதுவும் செலவாகிவிட்டதால் கையில் காசு இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டேன்.

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்ட நான், அதற்காகவே விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். பிறகு சில வேலைகளை செய்து சம்பாதித்து வீட்டு வாடகை கொடுத்தேன். இது தான் அப்போது எனது வாழ்க்கையாக இருந்தது.”என்று கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close