பாகிஸ்தானை உளவு பார்க்கிறாரா சானியா மிர்சா?

  கனிமொழி   | Last Modified : 13 Apr, 2018 07:21 pm


நீங்க இந்திய உளவாளியா என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலியா பட், விக்கி கெளஷல் நடிக்கும் படம் ராஸி. இயக்குநர் மேக்னா குல்சார் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியானது. இந்தியா - பாகிஸ்தான் போர் நடந்த காலக்கட்டதில் நடப்பது போன்ற கதை அம்சம் கொண்ட படம் இது. இதில் இந்திய உளவாளியாக ஆலியா நடிக்கிறார். இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு பாகிஸ்தானில் செட்டில் ஆகிறார் ஆலியா. பிறகு, அங்கு நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் கணித்து இந்தியாவுக்கு தகவல் சொல்லும் உளவாளியாக நடித்திருக்கிறார். 

இந்த த்ரில்லர் படத்தின் டிரைலர் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. பாலிவுட் இணையதள பத்திரிகை ஒன்று, டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்ஸாவிடம் 'ராஸி படத்தில் வரும் விஷயம் எல்லாமே உங்களுக்குப் பொருந்துகிறதே... இது உங்கள் கதையா' எனக் குறும்பாகக் கேட்டது. அதற்கு சானியா, 'ம்ம்ம்.. நான் இல்லையென்று நினைக்கிறேன்' என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும் இந்தியாவுக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close