சின்ன கஜோல் நடிக்க வருகிறாரா?

  கனிமொழி   | Last Modified : 17 Apr, 2018 12:30 am


இந்த வருடம் பாலிவுட் பிரபலங்களின் மகள்கள் அறிமுகமாகும் வருடம் போல. ஏற்கனவே ஶ்ரீதேவியின் மகள் ஜான்வி முதல் படத்தில் அறிமுகமாகிவிட்டார். ஷாருக்கானின் மகள் சுஹானா கானின் அறிமுகப் படம் பற்றிய செய்திகள் பற்றிய தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், தற்போது அஜய் தேவ்கன் - கஜோல் ஆகியோரின் மகள் நைஸாவும் பாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதாக சொல்லப் படுகிறது. 

டீனேஜில் இருக்கும் நைஸா சிங்கப்பூரில் படித்து வருகிறார். தற்போது விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளார். இந்த கேப்பில் அவர் நடிப்புக்கு பிள்ளையார் சுழி போடுவார் என ஆவலோடு எதிர்ப்பார்க்கப் பட்டது. அதற்கு அஜய் தேவ்கன், "நைஸா அவளது பள்ளிப் பருவத்தை என்ஜாய் செய்துக் கொன்டிருக்கிறாள், தான் பெரியவளாகி இதெல்லாம் செய்ய வேண்டுமென அவளுக்கென ஒரு கனவு இருக்கிறது. அந்தக் கனவில் இப்போது வரை நடிக்கும் விருப்பம் இடம்பெறவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close