• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

பிரபாஸ் படத்தை வெளியிடும் பாலிவுட் நிறுவனம்

  பால பாரதி   | Last Modified : 18 Apr, 2018 01:39 pm


பிரபாஸ் நடித்து, வெளிவரத் தயாராக இருக்கும் 'சாஹோ' படத்தை, பிரபல பாலிவுட் நிறுவனம் வெளியிட முன்வந்துள்ளது.  

இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் பிரமாண்டமான வெற்றியால் அந்தப் படங்களின் நாயகன் பிரபாஸ், நட்சத்திர நாயகனாக மாறியிருக்கிறார். இதனால், அவரின் அடுத்த படமான 'சாஹோ' திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

'சாஹோ' திரைப்படத்தில் பிரபாஸ் உடன் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப், மந்திரா பேடி, மகேஷ் மஞ்சரேகர் மற்றும் சங்கி பாண்டே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு மதி ஒளிப்பதிவு செய்ய,சுஜீத் இயக்க.யூவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். 


மூன்று மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் இந்தியாவிலும், அயல்நாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார் வாங்கி இந்தியில் வெளியிடுகிறார். 

'சாஹோ' திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடத்தின் துவக்கத்தில் படத்தை திரைக்கு கொண்டுவரும் திட்டத்தில் உள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close