இணையத்தை தெறிக்க விடும் சஞ்சய் தத்தின் வரலாற்றுப் படமான 'சஞ்சு' டீசர்

  கனிமொழி   | Last Modified : 25 Apr, 2018 10:55 am


இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தற்போது இயக்கி வரும் படம் 'சஞ்சு'. நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். தியா மிர்ஸா சஞ்சய் தத்தின் மனைவியாகவும், அனுஷ்கா ஷர்மா வக்கீலாகவும், சோனம் கபூர் டீனா அம்பானியாகவும் நடிக்கிறார்கள். சட்ட விரோத ஆயுதக் கடத்தலுக்காக பல வருடம் சஞ்சய் தத் ஜெயிலில் இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அவரது சொந்த வாழ்க்கை, எந்த சூழ்நிலை அவரை குற்றவாளியாக்கியது என்பதை இந்தப் படம் மூலம் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். 

தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தைக் கலக்குகிறது. வெளியான 21 மணி நேரத்திற்குள் 16 மில்லியன் மக்களுக்கு மேல் இதனைப் பார்த்திருக்கிறார்கள். அனைத்து ஃப்ரேம்களில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் வெவ்வேறு கெட்டப்களில் வருகிறார். மற்றவர்கள் யாரும் இந்த டீசரில் இடம் பெறவில்லை. அதோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியிருக்கிறது. இவை படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பை இன்னும் அதிகப் படுத்தியுள்ளது. 

உள்ளது உள்ளபடியே இருக்குமா..?

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close