சோனம் கபூர் திருமணத்தில் பிளான் மாறியது

  கனிமொழி   | Last Modified : 25 Apr, 2018 02:58 pm


இந்த வருடம் பாலிவுட் மக்கள் இரண்டு திருமணத்திற்காக காத்திருக்கிறார்கள். ஒன்று தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் மற்றொன்று சோனம் கபூர் - ஆனந்த அஹுஜா. இதில் சோனம் கபூரின் திருமணம் வரும் மே மாதம் ஸ்விட்சர்லாந்தில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. 

ஆனால் சோனம்-ஆனந்த் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குறைந்தது 150 பேராவது திருமணத்திற்கு வருவார்கள். இதில் வயதானவர்களும் இருக்கிறார்கள், அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஸ்விட்சர்லாந்த் போவது கடினம் என அறிந்திருக்கிறார் சோனம். தேவையில்லாமல் இவ்வளவு பணத்தை செலவழிக்க சோனத்திற்கு விருப்பம் இல்லையாம். அதோடு அவருக்கு திருமண சடங்குகளில் மிகுந்த நம்பிக்கை இருக்கிறதாம். அதனால் மற்ற இடங்களை விட திருமணத்திற்கு தனது வீடு தான் சிறந்தது என முடிவு செய்திருக்கிறாராம். 

அதனால் தற்போது வெளியான செய்திகளின் படி மே 7-ம் தேதி மும்பையில் சோனம் கபூருக்கு டும் டும் டும்... 

கல்யாணத்துக்கு அப்புறம் நடிப்பீங்களா? 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close