• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

தயாராகிரது முன்னா பாய்யின் மூன்றாம் பாகம்!

  கனிமொழி   | Last Modified : 26 Apr, 2018 12:20 pm


பாலிவுட்டில் கடந்த 2003-ம் ஆண்டில் வெளியாகியப் படம் 'முன்னா பாய் MBBS'. இதனை இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியிருந்தார். சஞ்சய் தத், அர்ஷத் வர்ஸி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, வினோத் சோப்ரா தயாரித்திருந்தார். அப்போது 22 கோடியில் எடுக்கப் பட்ட இந்தப் படம் 150 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆனது. 

இதைத் தொடர்ந்து 'லேஜ் ரஹோ முன்னா பாய்' என்ற பெயரில் இதன் இரண்டாம் பாகம் 2006-ல் வெளியானது. இதில் புதிதாக வித்யா பாலனும் இணைந்துக் கொண்டார். மெகா பட்ஜெட்டில் தயாரன இதுவும் பெரிய லாபத்தை ஈட்டி தந்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆனது. 

இதற்கிடையில் இந்தப் படத்தின் முதல் பாகத்தை 'வசூல் ராஜா MBBS' என்ற பெயரில் இயக்குநர் சரண் தமிழில் ரீமேக்கினார். கமல் ஹாசனும் பிரபுவும் சஞ்சய் தத் மற்றும் அர்ஷத் கேரக்டர்களில் நடித்தனர், தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

தற்போது முன்னா பாய்யின் மூன்றாவது பாக ஸ்கிரிப்ட்டில் இயக்குநர் படு பிஸியாக இருக்கிறாராம். சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சஞ்சுவின் வேலைகள் முழுமையாக முடிந்து ரிலீஸுக்கு ரெடியானதும், உடனே முன்னா பாய்யின் வேலைகளை முழு வீச்சில் தொடங்க இருக்குறாராம் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. 

சிரிப்பு கேரண்டி...

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close