படங்களில் ஒப்பந்தமாகாமல் இருப்பது ஏன் - தீபிகா படுகோன்!

  கனிமொழி   | Last Modified : 21 May, 2018 01:10 pm


இந்த வருட தொடக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியடைந்து வசூலை குவித்தப் படம் பத்மாவத். படத்தில் தீபிகா படுகோனின் நடிப்பு பெரிதும் பேசப் பட்டது. ஷாகித் கபூர் ஹீரோவாகவும், தீபிகாவின் நிஜ ஹீரோவான ரன்வீர் சிங் வில்லனாகவும் நடித்திருந்தார்கள். படம் வெளிவந்து 5 மாதங்கள் ஆகியும் தீபிகா இன்னும் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. 

தனது நெடுநாள் காதலரான ரன்வீர் சிங்குடன் தீபிகாவுக்கு விரைவில் திருமணம் நடக்கவிருப்பதால் தான், அவர் எந்தப் படங்களிலும் ஒப்பந்தமாகவில்லை என ஒரு சாராரும், கழுத்து மற்றும் தோள் பட்டையில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக அவர் ஓய்வில் இருக்கிறார் என இன்னும் சிலரும் இது குறித்து பல்வேறு தகவல்களைப் பரப்பினார்கள். 

ஆனால் உண்மையிலேயே தனக்கு வலு சேர்க்கும் கேரக்டர்களை இன்னும் எந்த இயக்குநரும் தீபிகாவிடம் சொல்லவில்லையாம். பத்மாவத் படம் போல ஆழமான கதாப்பாத்திரங்களில் நடிக்கவே அவர் ஆசைப் படுகிறாராம். அதோடு சம்பளப் பிரச்னையும் இருக்கிறதாம். நடிகர்களைப் போல் நடிகைகளுக்கு தகுந்த சம்பளத்தை எந்த புரொடக்‌ஷன் நிறுவனமும் கொடுக்க முன் வருவதில்லையாம். அதனால் தான் தனது அடுத்தப் படத்தைப் பற்றி இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார் தீபிகா. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close