ரஜினி நாயகியின் புதிய வெப் சீரியல்!

  கனிமொழி   | Last Modified : 21 May, 2018 02:43 pm


படங்களுக்கு சமமாக பாலிவுட்டிலும் ஹாலிவுட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவது வெப் சீரியல்கள். இந்தியில் புகழ் பெற்ற இயக்குநர் அனுராக் கஷ்யாப்பும், விக்ரமாதித்ய மோத்வானியும் இணைந்து தற்போது ஒரு வெப் சீரியலை இயக்கி இருக்கிறார்கள். பெயர் 'சேக்ரெட் கேம்ஸ்'. 

இதில் நாவாசுதின் சித்திக், சாயிஃப் அலிகான், ராதிகா ஆப்தே, சுர்வீன் சாவ்லா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். 

இதனை பேந்தோம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இணையத்தில் நெட்ஃபிளிக்ஸ் வெளியிடுகிறது. 2006-ல் அமெரிக்க-இந்திய எழுத்தாளர் விக்ரம் சந்திரா எழுதிய 'சேக்ரெட் கேம்ஸ்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வெப் சீரியல் உருவாக்கப் பட்டுள்ளது. இதனை வரும் ஜூலை 7-ம் தேதியிலிருந்து நெட்ஃப்ளிக்ஸில் காணலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close