இந்த விஷயத்தில் மாமனாரை பின்பற்றும் ஐஸ்வர்யா ராய்!

  கனிமொழி   | Last Modified : 22 May, 2018 04:52 pm


உலக அழகி ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதில் கேன்ஸ் விழாவில் தனது மகள் ஆராத்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டார். தொடர்ந்து, கேன்ஸ் விழாவில் தான் அணிந்திருந்த உடைகள், பள்ளி பருவ படங்கள் என பதிவிட்டுக் கொண்டு இருந்தார்.

அவரின் சக நடிகர், நடிகைகள் ஐஸ்வர்யாவை இன்ஸ்டா உலகிற்கு வரவேற்றனர். ஆனால், அவரோ யாரையுமே பின்பற்றவில்லை. இவ்வளவு ஏன் தன் கணவர் அபிஷேக் பச்சனையோ, மாமனார் அமிதாப் பச்சனையோ கூட பின்பற்றவில்லை. ஏதாவது சண்டையாக இருக்குமோ என ரசிகர்கள் நினைத்தனர். 

ஆனால் இந்த விஷயத்தில் தனது மாமனாரை பின்பற்றுகிறார் ஐஸ். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் அமிதாப் பச்சன். அவர் போடும் ட்வீட், ஸ்டேட்டஸ்களைக் கூட கணக்கு வைத்துக் கொள்வார். அவரை இதுவரை 8.9 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாவில் பின் தொடர்கிறார்கள். ஆனால் அவர் யாரையுமே இதுவரை பின் தொடரவில்லை. அதுபோல் தனது மாமனார் வழியை ஐஸ்வர்யா ராய் பின்பற்றுகிறார் என பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப் படுகிறது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close