இந்தியில் ரிலீஸாகும் விவேகம்!

  கனிமொழி   | Last Modified : 24 May, 2018 08:00 am


நடிகர் அஜித் இயக்குநர் சிவா காம்போவில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘விவேகம்’. இதில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், நடிகை அக்ஷரா ஹாசன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 

அனிருத் இசையமைத்திருந்த இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே ஹிட் ஆனது. விவேகம் படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இதனை மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. 

இந்தப் படம் இந்தியில் வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது. அதன் டப்பிங் மற்றும் சேட்டிலைட் உரிமையை மும்பையைச் சேர்ந்த மனிஷ் ஷா என்பவர் ‘கோல்ட்மைன் டெலி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் அதிக விலைக்கு வாங்கியிருக்கிறார். தற்போது, இந்தி வெர்ஷனுக்கு ‘வீர்’ என டைட்டில் வைக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை வருகிற ஜூன் 1-ம் தேதி பாலிவுட்டில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close