கோலியின் சவாலை ஏற்றுக் கொண்ட அனுஷ்கா ஷர்மா!

  கனிமொழி   | Last Modified : 25 May, 2018 03:19 pm


மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற் பயிற்சியை வீடியோவாக வெளியிடும்படி வலியுறுத்தினார். அதோடு தான் செய்யும் உடற் பயிற்சியையும் ட்விட்டரில் வெளியிட்டு இந்த சேலஞ்சை முன்னெடுக்கும் படி விராட் கோலி, சாய்னா நெஹ்வால், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு பரிந்துரை செய்தார். 

இதனை ஏற்றுக் கொண்ட கோலி, தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டார். கூடவே பிரதமர் மோடி, கேப்டன் கூல் தோனி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோருக்கும் இந்த ஃபிட்னெஸ் சேலஞ்சை பரிந்துரைத்தார். 

கோலியின் சவாலை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த, பிரதமர் மோடி  கூடிய விரைவில் வீடியோவை பதிவிடுகிறேன் எனக் கூறியிருந்தார். 

இந்நிலையில் தனது கணவர் கோலியின், சவாலை ஏற்றுக் கொண்ட, அனுஷ்கா தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டுள்ளார். கூடவே இந்த சேலஞ்சை ஏற்கும் படி எனது நண்பர்கள் தீபிகா பல்லிகல், வருண் தவான் ஆகியோரை முன்மொழிகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close