ரன்பீர் கபூரின் மிரட்டலான நடிப்பில் சஞ்சு ட்ரைலர்

  திஷா   | Last Modified : 30 May, 2018 06:05 pm

un-believable-life-of-sanjay-dutt-sanju-trailer

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தற்போது இயக்கி வரும் படம் 'சஞ்சு'. நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடித்திருக்கிறார். அவரின் அம்மாவாக மனீஷா கொய்ராலாவும், தியா மிர்ஸா சஞ்சய் தத்தின் மனைவியாகவும், அனுஷ்கா ஷர்மா வக்கீலாகவும், சோனம் கபூர் டீனா அம்பானியாகவும் நடிக்கிறார்கள்.

சட்ட விரோத ஆயுதக் கடத்தலுக்காக பல வருடம் சஞ்சய் தத் ஜெயிலில் இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் அவரது சொந்த வாழ்க்கை, எந்த சூழ்நிலை அவரை குற்றவாளியாக்கியது என்பதை இந்தப் படம் மூலம் தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பே சஞ்சு படத்தின் டீசரும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி இருந்தது. இதில் வித்தியாசமான கெட்டப்புகளில் ரன்பீர் தோன்றியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் சஞ்சுவின் டீசரும் ஃபர்ஸ்ட் லுக்கும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. அதோடு படம் வரும் ஜூன் 29-ம் தேதி வெளியாகிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.