ஆலியாவுடன் காதல் தானாம்: உறுதிப்படுத்தினார் ரன்பீர்!

  Newstm Desk   | Last Modified : 01 Jun, 2018 12:05 pm
ranbir-confirms-relationship-with-alia-bhatt

நடிகை ஆலியாவுடனான காதலை உறுதிப்படுத்தினார் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர். 
பாலிவுட்டின் காதல் மன்னன் ரன்பீர் கபூர். எப்போதும் இவரது காதல் பற்றிய செய்திகள் பாலிவுட்டில் வலம்வந்து கொண்டே இருக்கும். முதலில் நடிகை கத்ரினா கைப்பை காதலித்தார் என்று பேசிப்பட்டது. பின்னர் நடிகை தீபிகா உடன் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தை கலக்கின.
தற்போது இளம் நடிகை ஆலியா பட்டுடன் பொது இடங்களுக்கு சென்று வருகிறார் ரன்பீர். சமீபத்தில் நடந்த சோனம் கபூரின் திருமணத்தின் போது இவரும் ஆலியாவும் ஒன்றாக வந்திருந்தனர். அப்போதே அவர்கள் காதலிப்பதை உறுதி செய்தது பாலிவுட் வட்டாரம். இந்நிலையில் தங்களுக்குள் இருக்கும் உறவுக்குறித்து பேசி உள்ளார் ரன்பீர் கபூர். 
அவர் வட ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது, "எங்களுக்கு இடையே இருக்கும் உறவு இப்போது தான் தொடங்கி உள்ளது. மிகவும் புதிதான ஒன்று. தற்போது இதுகுறித்து பெரிதாக பேச விரும்பவில்லை. இன்னும் காலம் செல்லவேண்டாம். ஆலியாவை பொறுத்தவரை நிஜ வாழ்க்கையிலும், சினிமாவிலும் என்னை மிகவும் கவர்ந்த ஒருவர். நான் 2 வருடங்களுக்கு முன்பு இருந்தது போல தற்போது இல்லை" என்று கூறினார். இதன் மூலம் அவர்கள் காதலிப்பதை ரன்பீர் உறுதிப்படுத்தி உள்ளார். 

சமீபத்தில் ரன்பீர் நடிப்பில் உருவாகி உள்ள சஞ்சு படத்தின் டிரைலர் வெளியானது. அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த ஆலியா பல ஹார்ட்டுகளை பறக்கவிட்டு இருந்தார். குறிப்பாக பல வருடங்களுக்கு முன்பு ரன்பீரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ஆலியா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close