கேங்ஸ்டராகும் ஸ்ருதி ஹாசன்?

  கனிமொழி   | Last Modified : 03 Jun, 2018 12:02 pm
shruthi-hasan-s-to-act-as-a-gangster

இயக்குநர் சுந்தர் சி - யின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்தில் டைட்டில் ரோலில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பல மொழிகளில் தயாராக இருந்த அந்தப் படத்திற்காக தனிப் பயிற்சியாளரை வைத்து வாள் சண்டை கூட கற்றுக் கொண்டார். ஆனால், திடீரென காரணம் அறிவிக்காமல் படத்தில் இருந்து விலகினார். அதன்பிறகு, எந்தப் படத்திலுமே ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகவில்லை. பிறகு அந்த கேரக்டரில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்நிலையில், மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கும் பாலிவுட் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வால் இதில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருவதாக தெரிகிறது. இப்படத்தில் ஸ்ருதி இதுவரை இல்லாத லெவலில், ரவுடிகளைப் போல, கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close